பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார்: எகிப்து பெண்ணுக்கு சிறை

பாலியல் வன்கொடுமை செய்ததாக பேஸ்புக்கில் பொய் புகார் கூறிய எகிப்து பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் அமல் பேதி. இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் கணக்கில், 12 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் என்றும், தான் வங்கியில் பணிபுரிந்து இருந்தபோது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தியதில், அந்த பெண் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பெண் ஏற்கனவே சிறையில் 140 நாட்கள் கழித்த நிலையில், மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார்: எகிப்து பெண்ணுக்கு சிறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்