கட்டுப்பாடுடன் இருப்பது முக்கியம்.. டெல்லி ஜும்மா மசூதி இமாம் பேட்டி..

போராட்டம் நடத்துவது நமது உரிமை என்றாலும், முக்கியமான தருணத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி நேற்று(டிச.18) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

போராட்டம் நடத்துவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை என்பதால், இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நாம் முக்கியமான தருணங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். மற்றவர்களின் தூண்டுதலுக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஆட்பட்டு விடக் கூடாது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம்களுக்குத்தான் இந்தியக் குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

அதே போல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர இது வரை சட்டமாகவில்லை. எனவே, அதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சையது அகமது புகாரி கூறியுள்ளார்.

You'r reading கட்டுப்பாடுடன் இருப்பது முக்கியம்.. டெல்லி ஜும்மா மசூதி இமாம் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்