அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார்.
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசிய போது, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான நிலையில், அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.
காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.