மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து இயக்க தீர்மானம்

பள்ளி செல்லம் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று தாலுகா தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜபாளையம், எஸ்.ராமலிங்காபுரத்தில் தமிழ் மாநில விவசாய சங்க தாலுகா தலைவர் அய்யனார் தலைமையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தாலுகா மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், எஸ்.ராமலிங்காபுரத்தில் இருந்து நம்மல நாயக்கர்பட்டிக்கு பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். மருத்துவ துணி தயாரிப்பு தொழிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சமுசிகாபுரம் முதல் முதுகுடி வரையிலான சாலையை அகலப்படுத்தி இரு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றய துணைச்செயலாளர் ஜெயக்குமார், மாநிலக்குழு ராமசாமி, மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான லிங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் வீராச்சாமி, முத்துமாரி கணேச மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பேசினர்.

You'r reading மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து இயக்க தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளியில் எந்ரேமும் மதுபோதை.. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்