கட்டண உயர்வு கண்டித்து நெல்லை பல்கலை மாணவர்கள் போராட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவு துறைகளின் கீழ் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகிறது.

குறிப்பாக, வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதக்கட்டணம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

அப்போது, மாணவர்களுக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, மாணவர்கள் போராட்டத்தை வைவிடாததால், போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால், அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You'r reading கட்டண உயர்வு கண்டித்து நெல்லை பல்கலை மாணவர்கள் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நவராத்திரி ஸ்பெஷல்: மொறு மொறுப்பான பருப்பு வடை.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்