தஞ்சாவூர் - உயிரே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்

CPI Protest against Thanjavur Hydrocarbon project

தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது, உயிரே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றார் மகேந்திரன்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம்” என்றார்.

மேலும், “4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது.

இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.” என்றார்.

You'r reading தஞ்சாவூர் - உயிரே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை - அன்புமணி, தமிழிசை வரவேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்