ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக அரசு எடுத்த அனைத்து கொள்கை முடிவுகளையும், மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கூறினார்.
தெலங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர காவல்துறையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் காரணமாக முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
நவம்பர் 1-ஆம் தேதி, கன்னட மொழியில் இல்லாத அரசுக் கோப்புக்களை பார்க்கப்போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோயைப் பரப்பும் கொசுக்களை வளரவிடாமல் தடுப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாகிய நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் பொருத்தமற்ற கேள்விகளை கேட்டு சிபிஎஸ்இ பெரும் தவறு செய்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல்சிலை திறக்கப்படுவதற்கு, 72 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்
சிபிஐயில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.