போலீசார் செல்போன் பயன்படுத்த தடை: டிஜிபி அலுவலகம் அதிரடி

DGP Office strictly prohibited to use Cellphones by police

போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது, செல்போன் பயன்படுத்த தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, பாதுகாப்பு பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்துவதால் கவனக்குறைவு, கவனச்சிதறல் ஏற்படும் என்றும் போலீசார் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதாகவும் வந்த தொடர் புகாரை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுத்துகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தம் காரணமாக செல்போனை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading போலீசார் செல்போன் பயன்படுத்த தடை: டிஜிபி அலுவலகம் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாத்தா மறைவு, கஜா புயல் சோகம்...பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த உதயநிதி ஸ்டாலின்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்