திருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

Submission of Nomination papers of Thiruvarur constituency began today

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்குகான பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (03.01.2019) தொடங்கியது. இது வரும் 10ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்பு மனு வாபஸ் பெற 14ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல், கட்சிகளிடையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் படலம் ஆரம்பித்துவிட்டது. போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தும் வருகின்றனர்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.

மேலும், தேர்தலின் எதிரொலியால் பணப்பட்டுவாடா போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க தொகுதி முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வரும் 31ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading திருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதிக்குமா? - சிட்னி போட்டியில் இந்தியா ரன் குவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்