பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பள்ளிகளில் 10ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறமை தேடல் தேர்வு ஆனது இந்த வருடமும் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த தேர்விற்குப் பதிவு செய்து கொள்ளலாம்.

தகுதி: தற்போதைய 2020-2021ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே.

SCHOLARSHIP AMOUNT:

பள்ளிக்காலத்தில் மாதம் ரூ.1,250/-

பள்ளிப்படிப்பிற்குப் பின் கல்லூரி காலத்தில் மாதம் ரூ.2,000/-

கட்டணம்: ரூ.50/-

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://www.dge.tn.gov.in/

இதற்கான விண்ணப்ப அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/1605879192.pdf

You'r reading பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோலி மோசமான கேப்டனல்ல, ரோகித் சர்மா தான் சிறப்பானவர் : கவுதம் காம்பிர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்