ஐந்தாம் வகுப்பு போதும், அரசு வேலை வாங்க!

ராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் துறையிலிருந்து 11 வருவாய் கிராமத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 11

கல்வி தகுதி: 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை.

வயது: 21 வயது முதல் 35 வயது வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
தாலுகா அலுவலகம்,
வட்டாச்சியர், ராஜசிங்கமங்களம்,
ராமநாதபுரம் – 623525.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/2021021123.pdf

You'r reading ஐந்தாம் வகுப்பு போதும், அரசு வேலை வாங்க! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆன்லைனில் வேட்புமனுக்களை பெறுகிறது மக்கள் நீதி மையம்: கமலஹாசன் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்