மலச்சிக்கலை போக்க எளிய வீட்டு வைத்தியம்

Home remedy solution for constipation

நாம் சாப்பிடும் உணவு பெருங்குடலில் பயணித்து சரியான முறையில் செரிமானம் ஆகி கழிவுகளாக வெளியேறினால்தான் நம் உடல் நலனும் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

என்னென்ன அறிகுறிகள் மலச்சிக்கலுக்கு காரணம் என்று பார்த்தால், வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது, மலக் கழிவை கஷ்டப்பட்டு வெளியேற்றுவது அல்லது முழுமையாக வெளியேறவில்லை என்ற உணர்வைத் தருவது, இறுகலாக மலம் கழிப்பது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மலசிக்கல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளலாம்.

நார்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்வது மலச்சிக்கலுக்கு நல்லத் தீர்வாக இருக்கும். சாப்பிடும் உணவு கெட்டியாக இல்லாமல் தளர்வாக சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

இதைத்தவிர மலச்சிக்கல் இருக்கும் நேரத்தில், வீட்டு வைத்தியம் கொண்டும் தீர்வுக் காணலாம். மலச்சிக்கலுக்கு பாலும், நெய்யும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி சுத்தமான பசு நெய் சேர்த்து பருகவும். காலை எழுந்ததும் உணவுக் கழிவுகள் எளிதாக வெளியேறும். மலச்சிக்கலும் நீங்கும். நச்சுகள் வெளியேறுவதால் குடல் சுத்தமாகும்.
நாம் சாப்பிடும் உணவுகளிலும் அடிக்கடி நெய் சேர்த்துக் கொள்வதும் நல்லது. நெய் நல்ல கொழுப்பையே சேர்க்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

You'r reading மலச்சிக்கலை போக்க எளிய வீட்டு வைத்தியம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் நாணயம் விழுங்கியதால் பலியானதாக கூறப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்