புற்றுநோயை தடுக்கும் பீட்ரூட்

Beetroot to prevent cancer

பீட்ரூட் எளிதில் கிடைக்கக்கூடியது. எங்கும் எளிதாகக் கிடைப்பதால் அடிக்கடி சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீட்ரூட்டைச் சாறு எடுத்தும் அருந்தலாம். பீட்ரூட்டில் 80 சதவீதம் நீர், 2 சதவீதம் புரதம், 10 சதவீதம் கார்போஹைடிரேடு மற்றும் 1 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது. 100 கிராம் பீட்ரூட்டில் 43 கிராம் கலோரி உள்ளது.இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதால் கவலைப்படுகிறவர்கள், பீட்ரூட் ஜூஸ் அருந்தலாம். பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி இரத்த நாளங்களை விரிக்கிறது; இருதயத்தைத் தளர்த்துகிறது. ஆகவே, இரத்த ஓட்டம் அதிகமாகி, அழுத்தம் குறைகிறது.

பயிற்சிக்கான ஆற்றல்

உடற்பயிற்சி செய்வோர் நீண்டநேரம் உடலை உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்கும் ஆற்றல் உடலுக்குத் தேவை. தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் அருந்துவோருக்கு மற்றவர்களைக் காட்டிலும் 16 சதவீத ஆற்றல் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கும் பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட்டுகளே காரணம். பீட்ரூட் ஜூஸ், இரத்த சிவப்பு அணு உற்பத்தியைத் தூண்டி, உடலின் தாக்குப்பிடிக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது.
சுத்தமாக்கும் திறன் பீட்ரூட், நம் உடலைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. பீட்ரூட் ஜூஸ் அருந்தினால் உடலிலுள்ள நச்சுகள் மலக்குடல் வழியாக வெளியேற்றப்படும்.

உடல் எடை பராமரிப்பு

பீட்ரூட், சர்க்கரை அதிகம் கொண்டது. ஆனால், அது கொழுப்பு சிறிதும் இல்லாதது; குறைந்த கலோரி கொண்டது. பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகமானதால் உடல் எடையைப் பராமரிப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுப் பொருளாகும். கெட்ட கொலஸ்ட்ரால்
பீட்ரூட்டில் கரையக்கூடிய நார்ச்சத்து, பீட்டாசையனின் மற்றும் ஃப்ளவோனாய்டுகள் உள்ளன. பீட்டாசையனின் காரணமாகவே பீட்ரூட்டின் நிறம் உருவாகியுள்ளது. பீட்டாசையனின் ஆற்றல் கொண்ட ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் ஆகும். கெட்ட கொலஸ்ட்ராலாகிய எல்டிஎல்லின் ஆக்ஸிஜனேற்றத்தை குறைக்கிறது. இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் சுவர்களில் எல்டிஎல் படியாமல் காக்கிறது. இதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

கரு வளர்ச்சி

கருவுற்ற தாய்மார்கள் பீட்ரூட் அதிகம் சாப்பிட வேண்டும். பீட்ரூட், கருவிலுள்ள குழந்தை நன்றாக வளர உதவுகிறது. கருவிலுள்ள குழந்தை நன்றாக வளர்வதற்கு ஃபோலிக் அமிலம் அவசியம். கருவிலுள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சியில் குறைபாடு உண்டானால் முதுகெலும்பு சரியாக வளராது (Spinal bifida). இந்த பிறவி குறைபாட்டின் காரணமாக முதுகெலும்பு இரண்டு துண்டாக இருப்பதுபோல் தோன்றும். பீட்ரூட்டிலுள்ள ஃபோலிக் அமிலம் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

எலும்பு வளர்ச்சி

பீட்ரூட்டில் சிலிகா என்ற தாது அதிகம் காணப்படுகிறது. இது உடல், சுண்ணாம்புச் சத்தினை (கால்சியம்) கிரகித்துக்கொள்வதற்கு உதவுகிறது. உடலில் கால்சியம் அதிகமாகும்போது பற்கள், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்

பீட்ரூட்டிலுள்ள பீட்டாசையனின் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. ஹாவர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி பீட்ரூட் சாப்பிடுவதால் தோல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் தடுக்கப்படலாம் என்று கூறுகிறது. சம அளவில் காரட் மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்துப் பருகுவது லூகேமியா என்னும் இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது.

You'r reading புற்றுநோயை தடுக்கும் பீட்ரூட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கெஸ்ட் ஆர்டிஸ்ட் சசி தரூரிடம் மன்னிப்பு கேட்ட எம் பி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்