உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா??பயப்படவேண்டாம்!!நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை

how to control asthma in tamil

நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிமாகி வருவதால்,சாலையில் வாகனங்ளும் அதிகரித்து வருகிறது.இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடைய செய்கிறது.மாசு படிந்த காற்றை சுவாசிக்கும் பொழுது நுரையீரல் பாதிக்கப்படுகிறது.இதனின் விளைவாக ஆஸ்துமா நோயால் பல்லாயிரகணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றன.ஆஸ்துமா என்பது பெரிய நோய் என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.எவையும் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் எதையும் முறியடித்து விடலாம்.ஆஸ்துமா கோளாறு அதிகமாக நகரங்களில் இருந்து தான் உருவாகிறது.

ஆஸ்துமா என்றால் என்ன??

நாம் சுவாசிக்கும் முச்சு குழாவில் இடையூறு ஏற்படுவதால் மூச்சு திணறல், தும்மல்,சுவாசிப்பதில் கோளாறு ஆகியவை ஏற்படும்.இதனை தடுக்க நிரந்திர மருந்து எதுவும் இல்லை.ஆனால் ஆஸ்துமாவை நம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால் எந்த வித ஆபத்தும் இல்லை.நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை பார்க்கலாம்.

தூசியினால் ஏற்படும் கோளாறு:-

அதிக அளவிலான தூசியை சுவாசிப்பதால் மட்டுமே ஆஸ்துமா தோன்ற முக்கிய காரணமாக இருக்கிறது.வீட்டை விட்டு வெளியே போகும் போது அல்லது வீட்டை சுத்தம் செய்யும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.வீட்டை எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் மட்டுமே ஆஸ்துமாவை சிறிது கட்டுப்படுத்த முடியும்.

புகையினால் ஏற்படும் கோளாறு:-

ஆஸ்துமா உள்ளவர்கள் புகை சூழும் இடத்தை விட்டு சற்று தள்ளி இருக்க வேண்டும்.வீட்டில் உள்ள சமையல் அறையில் கூட புகை சூழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.ஆஸ்துமா உள்ளவர்களுக்கு புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அறவே தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்கள் வீட்டில் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதை கைவிட வேண்டும். செல்லப்பிராணிக்களிடையே வெளியாகும் முடி,உண்ணிகள் போன்றவற்றை ஆஸ்துமாவை உண்டாக்குவதற்கு முக்கிய காரணம்.

இது போன்ற செயல்களை அறவே கைவிட்டால் மட்டுமே ஆஸ்துமா நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

You'r reading உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா??பயப்படவேண்டாம்!!நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எஸ்பிபி முழுமையாக கண்விழித்தார், பிசியோதெரப்பியில் சுறுசுறுப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்