சுக்கில் இவ்வளவு அற்புதமான விஷயங்கள் இருக்கா?? அப்போ தினமும் இதை யூஸ் பண்ணலாமே!!

what are the benefits in dried ginger

சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது. சுக்கு, மிளகு, இஞ்சி, கடுக்காய் ஆகியவையே தொடர்ந்து நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் நம் கிட்ட கூட நெருங்க முடியாது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இஞ்சி, சுக்கு ஆகியவையில் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். வாரத்தில் 3 முறையாவது இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி ஒரு மருந்து குழம்பு போல் வைத்து உண்பார்கள். அவர்கள் சாப்பிடும் பொருள்களில் இயற்கை குடியிருந்தது.

ஆனால் நாம் இருக்கும் காலகட்டத்தில் இயற்கையான ஒரு பொருள் கிடைப்பது என்பது அரிதாக தான் உள்ளது. முடிந்த வரை வீட்டில் இருக்கும் பொருள்கள் அல்லது இயற்கையில் விளைந்த பொருள்களை பயன்படுத்த தொடங்குங்கள். அந்த கால மக்கள் இயற்கையான பொருளால் ஆன உணவை சாப்பிட்டதால் மட்டுமே கல்லு போல் இருந்தனர். இஞ்சியை வெயிலில் காய வைப்பதில் இருந்து தான் சுக்கு பிறக்கிறது. சரி வாங்க இயற்கையான முறையில் சுக்கை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

தயாரிக்கும் முறை:-
முதலில் தேவையான இஞ்சியை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதில் இருக்கும் தோலை சீவி எடுத்து கொள்ள வேண்டும்.சுக்கு தயாரிப்பதற்கு இஞ்சில் தோல் இருக்க கூடாது. தோல் சீவிய உடன் இஞ்சியில் ஒட்டி இருக்கும் மண்ணை நன்றாக சுத்தம் செய்த்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாரம் தொடர்ந்து இஞ்சியை வெயிலில் காய வைக்க வேண்டும்.சுக்கை உடைக்கும் பொழுது மொறு மொறு என்று உடைய வேண்டும். அவ்வாறு உடைந்தால் மட்டுமே சுக்கு பதத்தில் இஞ்சி தயார் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

இதனை மிக்சியில் அரைத்து பொடி ஆக்கி மூடி போட்ட பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.சமையலுக்கு தேவைபடும் புழுத்து சுக்கு தூளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சுக்கு பொடி 4 மாதங்கள் கெடாமல் இருக்கும். சுக்கு பால் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் சளி, வறட்டு இருமல், வயிற்று போக்கு ஆகியவை குணப்படுத்தும்...

You'r reading சுக்கில் இவ்வளவு அற்புதமான விஷயங்கள் இருக்கா?? அப்போ தினமும் இதை யூஸ் பண்ணலாமே!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா : ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்