பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா??

what are the benefits and uses in badam

பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் போன்ற ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. தினமும் பாதாம் சாப்பிடுவதால் சோம்பேரியாக இல்லாமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆரோக்கியமே தனி.. இரவு முழுவதும் தண்ணீரில் பாதாமை உறவைப்பதை விட 6 மணி நேரம் ஊறவைத்தாலே போதுமானது. பிறகு ஊறவைத்த பாதாமை தோலை உறித்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாக்க கூடும்.. தினமும் ஒருத்தர் 8 முதல் 10 பாதாம் வரை சாப்பிடலாம் என்று குறிப்பிடத்தக்கது.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

பாதாமை தண்ணீரில் ஊற வைக்காமல் அப்படியே சாப்பிட்டால் உடல் எடை எற நிறைய வாய்ப்புள்ளது இதுவே ஊறவைத்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வில் தெரிவிக்க பட்டுள்ளது. சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும். இதில் இருக்கும் சத்துக்களால் இதயம் ஆரோக்கியம் பெறுகிறது.

இதனை தினமும் தவறாமல் சாப்பிடுவது மூலமாக கூந்தலின் வளர்ச்சியை தூண்டுகிறது. மற்றும் செரிமானத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இருக்க பயன்படுகிறது. பாதாமின் முக்கிய அம்சம் என்னவென்றால் தினமும் சாப்பிடுவதால் நம் நினைவாற்றலை கூட்டுகிறது.

இவை உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை முழுவதுமாக குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மற்றும் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர்செய்கிறது.இதை நாள் தவறாமல் தினமும் சாப்பிடுவதால் சருமத்தின் நிறத்தை மேலும் கூட்டுகிறது.

பாதாம் பருப்பு நமக்கு பல நன்மைகளை வழங்குவதால், இதை நீங்கள் தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் அவற்றை ஊறவைத்து சாப்பிட மறக்காதீர்கள்.

You'r reading பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்?..தெரிந்து கொள்ளலாம் வாங்க..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்