உடல் ஆரோக்கியமாக இருக்க.. இந்த மூன்று பொருள்கள் இருந்தால் போதுமானது..!

எந்த வித நோயாக இருந்தாலும் சரி அதை குணப்படுத்த இயற்கையில் ஏராளமான வழிகள் உண்டு.நம் முன்னோர் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களை குணப்படுத்தி வந்தார்கள். நோய்கள் வராமல் தடுத்தும் இருக்கிறார்கள். இதனால் தான் ஆரோக்கியமான உடல்வாகுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். அந்த வரிசையில் மூன்று இயற்கையின் வர பிரசாத்தை பற்றி பார்ப்போம்..

குப்பைமேனி:-
குப்பைமேனி நெஞ்சு சளியைக் கட்டுபடுத்தும். இருமலை நீக்கும். விஷக்கடி, வாதநோய், இரத்தமும், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, நமச்சல் மற்றும் தலைவலி போன்ற நோய்களை நீக்கும். குப்பைமேனி வேர் 200 கிராம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு இளம் சூட்டில் வதக்கி படுக்கைப் புண்களில் கட்டி வைத்தால் புண்கள் விரைவில் ஆறிவிடும்.குப்பைமேனி இலையை கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாட்கள் உண்டு வர உடலில் வாயு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் சரியாகும்.

கற்பூரவல்லி:-
கற்பூரவல்லி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன.. இது நுரையீரலில் உள்ள அழற்சியை குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும். சுடுநீரில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து பருக வேண்டும். வாரத்திற்கு 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையைப் பறித்து கழுவி அப்படியே மென்று சாப்பிட்டும் வரலாம்.

சீரகத்தண்ணீர்:-
பொதுவாக சீரகத்தண்ணீரை ருசிக்காகவும் வாசனைக்காகவும் தான் பயன்படுத்துறோம். தமிழர்களுடைய பாரம்பரியம் என்பதில் சீரகம் மிக இன்றியமையாததாக உள்ளது. சீரகத் தண்ணீர் தயார் செய்வது மிக மிக எளிது. இரண்டு ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் தண்ணீரை சூடாகவும் குடிக்கலாம், ஆற வைத்தும் குடிக்கலாம். சீரகத் தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்போர் கண்டிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

You'r reading உடல் ஆரோக்கியமாக இருக்க.. இந்த மூன்று பொருள்கள் இருந்தால் போதுமானது..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த நீரை பருகினால்.. மூட்டு வலியெல்லாம் பறந்து விடுமாம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்