பசியில் இத்தனை வகையா? எது நல்லது? என்னென்ன உணர்வுகள் தோன்றும்?

பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். இதனால் எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல், உணவின் மீது முழு கவனம் செலுத்தி நம்மால் உணவினை நன்றாக உண்ண முடிகிறது. சரி வாங்க பசியின் வகைகளை பற்றி பார்க்கலாம்..

மனரீதியான பசி:-
நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான். இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது. ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளைமாற்றிக் கொள்கிறோம்.

கண் பசி:-
பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததால் சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது. சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

வாய் பசி:-
ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள். திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்.

You'r reading பசியில் இத்தனை வகையா? எது நல்லது? என்னென்ன உணர்வுகள் தோன்றும்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒன்றாக இணைந்த எதிரெதிர் துருவங்கள்.. ரூ.1037.6 கோடி டீல் போட்ட ஏர்டெல் - ஜியோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்