ஏசியில் அதிக நேரம் இருப்பவர்கள் கவனத்திற்கு....

ஏசியில் அதிகம் நேரம் இருப்பவர்கள் கவனத்திற்கு....

கொடை காலங்களில், புழுக்கம் தாங்க முடியாமல், ஏசி அறையில் இருப்பவர்கள் ஏராளம், அவர்கள், குளிர் முகத்தில் படவேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைப்பார்கள். ஆனால், குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில் தான் ஏசி இருக்க வேண்டும். அப்போது தான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும். நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது.

முக்கியமாக 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில் அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே 23 - 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்கு பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை ஏசியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.

ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக்கொள்வது நல்லது. வெப்பம் அறைக்குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி கிடைக்காது. ஏசி பொருத்தப்பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியாவதற்கான  அதிக நேரம் எடுக்கும். இதனால் மின்சாரமும் வீணாகும்.

பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும். பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைகிறது. அப்போது நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட ஆக்சிஜன் தேவை அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

You'r reading ஏசியில் அதிக நேரம் இருப்பவர்கள் கவனத்திற்கு.... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'வீழ்த்தினாலும் எழுந்து வருவேன்’- 40 வருட சினிமா குறித்து ரஜினி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்