வலி இல்லாமல் சுகப்பிரசவம் கொடுக்கும் முடக்கத்தான்

சுகப்பிரவத்திற்கும் உதவும்

என்னப்பா உன் மனைவிக்கு குழைந்தை பிறந்திடுச்சானு பெரியவங்க கேட்கிற அடுத்த கேள்வி. சிசேரியனா? இல்ல நார்மலானு தான். காலம் மாற மாற எத்தனையோ முன்னேற்றம் வந்தாலும், சுகப்பிரசவத்திற்காக எந்த கண்டுப்பிடிப்பும் இன்னும் வரவில்லை.

பெண்களின் உடலைக் கிழித்தே பிரசவம் பார்க்கின்றனர். ஆனால் பாட்டிக்காலத்தில் அனைத்தும் சுகப்பிரசவமே. அவர்ளின் பழக்கவழக்கம் அதுபோல. இங்கே நான் குறிப்பிடும் சில டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் சுகப்பிரவத்திற்கும் உதவும்.

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்
இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே கால் குவளையாக வரும் வரை காய்ச்சி, காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்

You'r reading வலி இல்லாமல் சுகப்பிரசவம் கொடுக்கும் முடக்கத்தான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிறித்தவர்கள் கொண்டாடிய விநாயகர்... நெகிழ்ச்சி சம்பவம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்