கீரின் டீயால் மறைக்கப்பட்ட பாரம்பரியமிக்க வெந்தய டீ.

வெந்தயத்தின் நன்மைகள் பல இவை அறிந்தும் நாம் கண்டுக்கொள்வதில்லை

வெந்தயத்தின் நன்மைகள் பல இவை அறிந்தும் நாம் கண்டுக்கொள்வதில்லை.

அதிகப்படியான நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியம் என பல சத்துக்களை அடக்கி வைத்துள்ளது.

அதனால் குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது தான் இந்த வெந்தயம்.

வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பது, வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என அனைத்தும் செய்திருப்பீர்கள். வெந்தய தேநீரை குடித்திருக்கிறீர்களா, அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.

இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.

கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.

தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.

நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

You'r reading கீரின் டீயால் மறைக்கப்பட்ட பாரம்பரியமிக்க வெந்தய டீ. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அர்ஜுனா விருது... ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா பெயர்கள் பரிந்துரை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்