மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறைப் போக்கும் பதங்குஸ்தாசனா

மனிதனுக்கு எவ்வளவு சிக்கல் இருந்தாலும் மனிதளவில் வாடி வதைக்கக்கூடிய ஒன்றுதான் மலச்சிக்கல். எவ்வளவு நேரம் கழிப்பறையில் அமர்ந்தாலும் இதற்கான தீர்வு கிடையாது. இனி பயமில்லை இக்காகாசனம் உங்கள் மலச்சிக்கலைப் போக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தினமும் காலை மாலை என செய்து பாருங்கள். பிறகு தெரியும் வித்தியாசம்.

முதலில் காலை நீட்டி உட்கார்ந்து கொள்ளவேண்டும். பின்னர் வலது காலை மேல் நோக்கி தூக்க வேண்டும். அப்போது வலது காலின் பாதத்தை வலது கையை கொண்டு பிடித்து கொள்ள வேண்டும். இதே போல் இடது காலை இடது பக்கமாக மேல் நோக்கி தூக்க வேண்டும். இடது கையைக் கொண்டு இடது கால் பாதத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.

தலையில் இருந்து முதுகுத தண்டு வடம் வரை நேராக இருக்க வேண்டும். கால்களில் முட்டியோ, கைகளின் முட்டியோ மடங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தான் பதங்குஸ்தாசனா ஆசனத்தை செய்யும் முறை ஆகும். படத்தில் உள்ளது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். அப்போது மூச்சு சாதாரண நிலையில் இருப்பது முக்கியம்.

பிற யோகாசன பயன்கள்

1. பத்மாசனம்

2. பாத ஹஸ்தா ஆசனம்

3. பதங்குஸ்தாசனா

4. மயூராசனம்

5. கோமுகாசனம்

6. பஸ்சிமோத்தாசனம்

7. சஸ்சாங்காசனம்

8. கூர்மாசனம்

9. திரிக தடாசனம்

 

10 முதல் 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். அதன் பின்னர் ஆழ்ந்து சுவாசித்துக் கொள்ள வேண்டும். மூல வியாதியை கட்டுப்படுத்த பதங்குஸ்தாசனாப் பயிற்சி உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆசனம் ஆகும. மலச்சிக்கல், வயிற்று கோளாறு உள்ளிட்ட வியாதிகளை சரி செய்ய உதவுகிறது.

You'r reading மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறைப் போக்கும் பதங்குஸ்தாசனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்