யோகாசனங்கள்: கர்ப்பப்பை சிறப்படைய கூர்மாசனம்


இக்காலக்கட்த்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை. அதுமட்டுமின்றி பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தையின்மையை அடைகின்றன.

இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள்.

செய்முறை
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும்.

அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி, இரு கைகளையும் முதுகின் பின்புறமாக (படத்தில் உள்ளபடி) பிடிக்க வேண்டும்.

முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் சுலபமாகும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும்போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தை )யும், நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்னு முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.



You'r reading யோகாசனங்கள்: கர்ப்பப்பை சிறப்படைய கூர்மாசனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள்-அக்டோபர் 2018

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்