யோகாசனங்கள்: ஆஸ்துமாவை குணமாக்க தாளாசனம்

Thalasanam to heal asthma

ஆஸ்துமா, கூன்முதுகு, வெரிகோஸ் வெயின் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோகாசனம் செய்யும் போது குணமடைவதை காணலாம்.

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை க்ஷி அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும்.

கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும்.
ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும்.

மூச்சின் கவனம்

கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள்
நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

You'r reading யோகாசனங்கள்: ஆஸ்துமாவை குணமாக்க தாளாசனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐ.நா. மனித உரிமை அவைக்கு இந்தியா தேர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்