இரவில் மது, காலையில் தலைவலி... தீர்வு இதோ!

Alcohol at night headache in the morning the solution is here

பெரும்பாலும் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு காலையில் தலைவலியால் அவதிப்படுபவர்கள்தான் அதிகம். இதுப்போன்று கடுமையான தலைவலியால் அவதிப்படுபவர்கள் இந்த பொருளை எடுத்துக்கொள்ளும் போது பத்தே நிமிடத்தில் அவர்களின் தலைவலி குணமடைகிறது.

மது அருந்திவிட்டு படுக்க செல்கையில் கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவவை உருவாகும்.ஆல்கஹால் காரணமாக கணையம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும்.

சிலருக்கு, குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக்கோளாறு, தலைவலி, சுவாசக் கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை போன்றவற்றிற்கு ஆளாகுவார்கள். இரவு நேரங்களில் அளவுக்கதிமாக குடித்துவிட்டு படுக்க சென்றால் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும்.

இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்துதான் இளநீர். காலையில் எழுந்தவுடன் தாங்க முடியாத தலைவலி என்றால் ஒரு இளநீர் குடியுங்கள். கொஞ்சம் பொறுமையாக அமர்ந்து இளநீர் குடித்தால், 10 நிமிடத்தில் தலைவலி பறந்துவிடும். அதன்பின்னர் நீங்கள் வழக்கம்போன்று உங்கள் பணிகளை தொடரலாம்.

You'r reading இரவில் மது, காலையில் தலைவலி... தீர்வு இதோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாட்டாமை டீச்சர் மீது நடிகர் சண்முகராஜ் புகார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்