சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சை சாப்பிடலாமா?

Can sugar patients eat black grapes

பல வகையான திராட்சைகள் இருந்தாலும் அதில் கருப்பு திராட்சை மிகவும் மருத்துவகுணம் கொண்டது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு வகைகளிலும் ஆந்தோசயானின், பாலி பீனால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன அதனால் அவை புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது. அதோடு புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தையும் குறைக்கின்றது.

இக்கருப்பு திராட்சையில் அதிக அளவிலான நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் போன்ற பழ சக்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் இதை உண்ணலாம்.

நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தினை இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ப்ரூக்டோஸை சாப்பிட்டவுடன் உற்சாகத்தை கொடுக்கும். திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள் அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்தஅளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை திராட்சை பழம் போக்கி, உற்சாகம் தரும்.முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூட்டை குறைக்கவும் மற்றும் தோல் நோய்களை குறைக்கவும் இப்பழம்பயன்படுகிறது.

திராட்சை விதையில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இவை நல்ல மருந்து.

You'r reading சர்க்கரை நோயாளிகள் கருப்பு திராட்சை சாப்பிடலாமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டைட்டில் கார்டில் வருண் பெயர் இடம்பெறாது; சர்கார் கதை என்னுடையது தான்: ஏ.ஆர். முருகதாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்