உங்ககிட்ட கருப்பு தங்கம் இருக்கா? அப்படி இருந்தா 10 போதும்...

Do you have black gold? Is that 10 is enough

தங்கம் கேள்விபட்டிருப்பீங்க, அது என்ன கருப்பு தங்கம்னு தானே யோசிக்கிறிங்க. சரி சொல்றேன், கேளுங்க.

‘10 மிளகு கையில் இருந்தால், பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்று கூறுவர் நம் முன்னோர்கள். நஞ்சை முறித்து உயிரை காக்கும் தன்மை மிளகுக்கு உள்ளது. அதோடு மட்டுமின்றி, உணவில் சேர்க்கும்போது மனத்தையும், சுவையையும் கூட்டி தருகிறது. நம் நாவில் உள்ள சுவை நரம்பு, உமிழ்நீர் சுரப்பிகளையும் தூண்டுகிறது. அதனால் இதற்கு “கருப்பு தங்கம்” என்ற பெயரும் உள்ளது.

மிளகில் உள்ள  மருத்துவ குணங்கள்:

நாம் அனைவரும் அன்றாடம் உணவாக எடுத்துக் கொள்ளும் மிளகு ரசம், மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

செரிமானத்தைச் சீர் செய்து, குடலைப் பலப்படுத்துகிறது. வாயுத்தொல்லை, அஜீரணம் ஏற்படாமல் தடுக்கிறது.

மிளகு இலையை மருந்தாக பயன்படுத்தலாம். மிளகு இலையையும், நொச்சி இலையையும் சேர்த்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து, கால் வீக்கம், வலி, அடிப்பட்ட வீக்கத்துக்கு இந்த நீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை நீங்கும்.

மிளகு இலை - இரண்டு, லவங்கம், வெற்றிலை - தலா ஒன்று எடுத்து மைய அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேலையும் கொடுக்க, விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சல் தணியும்.

பெண்ளுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் நீங்க, ஐந்து மிளகோடு ஒரு கழற்சிக்காய் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் உட்கொள்ள வேண்டும். இம்மருந்தை அதிக ரத்தப்போக்கு உள்ள நாட்களில் தவிர்ப்பது நல்லது.

வயதானோருக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் மூலம் தணிய மிளகுப் பொடி - கால் டீஸ்பூன், சோம்பு, தேன் - தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து, இரு வேலையும் சாப்பிட்டு வர வேண்டும்.

உடலில் தேவையற்ற கொழுப்பு நீங்கவும், வயிற்றைச் சுற்றியுள்ள சதை குறையவும், ரத்த ஓட்டம் சீர் பெறவும், தினமும் ஐந்து மிளகோடு இரண்டு வெற்றிலை சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

You'r reading உங்ககிட்ட கருப்பு தங்கம் இருக்கா? அப்படி இருந்தா 10 போதும்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மண்மூடி மறைக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்