புற்றுநோயைத் தடுக்கும் வெட்சிப் பூவின் மருத்துவ குணங்கள்

Medicinal properties of vetchi flower that prevent cancer

வெட்சி என்று சொன்னதும், இது என்ன புதுவகையான பூவாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம். அனைவரது வீடுகளிலும் அழகுக்காக வைத்து வளர்க்கும் இட்லி பூ செடிதான் இது.

பதிமூன்று திணைகளுள் முதன்மையானது வெட்சி. இம்மக்கள் வெட்சிப்பூவை சூடி மகிழ்வார்கள். மேலும் இப்பூ பலவகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவற்றை பார்ப்போமா.

மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் சளியை நீக்கி அவற்றை கரைத்து வெளியேற்றுகிறது. அதோடு சில பேருக்கு இரத்தத்துடன் கூடிய சளி வெளியேறும், அப்பிரச்சனையையும் வெட்சிப்பூ தீர்க்கிறது.

தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் இலைகளை அரைத்து அவற்றின் மீது பற்றுப் போட தோல் நோய்கள் குணமடைகிறது. மேலும் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும், அதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல் நோய்கள் குணமாகும் அதுமட்டுமின்றி தோலில் ஏற்படும் அரிப்பை சரியாக்குகிறது.

வயிற்றுபோக்கையும் குணமாக்குகிறது. இத்தைலத்தை தலையில் தேய்த்து குளித்துவந்தால் முடி நன்றாக வளரும். உடல் சோர்வையும் வெட்சிப்பூ போக்குகிறது.

வெள்ளைப் போக்கு உள்ளவர்கள் இப்பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு மோரில் கலந்து குடித்து வந்தால் சரியாகிவிடும். புற்றுநோயை தடுக்கிறது. அதுமட்டுமின்றி கருப்பையில் உண்டாகும் புண்களை ஆற்றுகிறது.

You'r reading புற்றுநோயைத் தடுக்கும் வெட்சிப் பூவின் மருத்துவ குணங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்