ஜம்மு காஷ்மீரின் லே எல்லையில் சீனாவுக்கு மிரட்டல் விடுக்க இந்திய ராணுவம் குவிப்பு

India orders moving of strategic ITBP command to Le

ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் ராணுவத்தை சீனா பலப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனா எல்லையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக்காலமாக காஷ்மீரின் லே மாவட்ட எல்லையில் சீனா ராணுவத்தை பலப்படுத்தி வந்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில் சண்டிகரில் இருந்த இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார், லே பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பூட்டானின் டோக்லாமை கைப்பற்ற சீனா முயற்சித்தது.

இதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்தது. லே பகுதியில் அடிக்கடி ஊடுருவி வந்த சீனா இப்போது அங்கு ராணுவ நிலைகளை பலப்படுத்த நமது ராணுவமும் அங்கு குவிக்கப்படுகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

You'r reading ஜம்மு காஷ்மீரின் லே எல்லையில் சீனாவுக்கு மிரட்டல் விடுக்க இந்திய ராணுவம் குவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது- விடிய விடிய மக்கள் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்