ரிலீசானது பால்தாக்கரே திரைப்படம் - சிவசேனாவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

Release Bal Thackeray movie- Shiv Sena members, dance, celebration!

"பால்தாக்கரே" திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஒரு காலத்தில் மும்பையின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர். அதிரடி நடவடிக்கைகளால் மும்பையை கிடு கிடுக்கச் செய்தவர். அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக "பால்தாக்கரே" என்ற பெயரில் பிரபல பாலிவுட் இயக்குநர் அபிஜித் பான்சே இயக்கத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

இதில் பால் தாக்கரேவாக நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவான படம் இம்பையில் இன்று வெளியானது. அதிகாலை முதலே தங்கள் தலைவரின் நினைவலைகளை திரையில் காண சிவசேனா தொண் டர்கள் குவிந்து ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று தான் கங்கனா ராவத் ஜான்சிராணியாக நடிக்கும் மனிகர்னிகா திரைப்படமும் ரிலீசாவதால் மும்பை தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது

You'r reading ரிலீசானது பால்தாக்கரே திரைப்படம் - சிவசேனாவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - "திரெளபதியை துகிலுறியும் போஸ்டர்" - தெலுங்கானாவில் வெடித்த சர்ச்சை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்