திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி அம்போவான சோகம்!

Canada man with 200 million dollars password dies in India.

இந்தியா வந்த கனடா நாட்டு தொழில் அதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். பண பரிவர்த்தனை குறித்த ரகசிய பாஸ்வேர்ட் எண் யாரிடமும் சொல்லாமலே இறந்து விட்டதால் சுமார் 1500 கோடி ரூபாய் அம்போ வாகிவிட்ட சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும், கம்பெனி நிர்வாகத்தினரும் உள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த ஜெரால்டு காட்டன் என்பவர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் தனது மனைவியுடன் இந்தியா வந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட காட்டன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆதரவற்றோர் மையம் துவங்குவதற்கான பணிகளில் மும்முரமாக இருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெரால்டு காட்டனின் சடலத்தை கனடாவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்த பின்னர் தான் அவர் பணம் பரிவர்த்தனை குறித்த எந்தத் தகவலையும், ரகசிய பாஸ்வேர்ட் எண்ணையும் யாரிடமும் தெரிவிக்காமலே இறந்து விட்டது தெரிய வந்தது.

எவ்வளவோ முயன்றும் அவருடைய குடும்பத்தாராலும், கம்பெனி நிர்வாகத்தினராலும் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 200 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாய் அம்போ வாகி விட்டது.

இதனால்காட்டனின் குடும்பத்தினருக்கும், அவருடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களும் புலம்புகின்றனர்.

 

You'r reading திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி அம்போவான சோகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்