கார் விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் - காயங்களுடன் உயிர் தப்பினார்!

Kallakurichi admk mp Kamaraj injured in car accident

சேலம் அருகே கார் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்ததில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி காமராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம் பள்ளியில் நடக்கவுள்ள அரசு விழாவிற்காக கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி காமராஜ் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் டயர் வெடித்து தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் காமராஜ் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நேற்று அதிகாலை விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிமுக எம்.பி விபத்தில் சிக்கி காயமடைந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading கார் விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் - காயங்களுடன் உயிர் தப்பினார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வங்கிகள் பிடித்தம் செய்த அபராதம் திரும்ப வழங்கப்படும் - ப.சிதம்பரம் உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்