இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்.16 விமானத்தின் உருக்குலைந்த புகைப்படம் வெளியீடு!

wreckage of downed Pakistan F16 picture released

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எப்.16 ரக போர் விமானத்தை இந்தியப் படை சுட்டு வீழ்த்தியது. உருக்குலைந்த விமானத்தின் புகைப் படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதற்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது. இந்தியப் படை விமானங்கள் பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தானின் எப்.16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.

தமது நாட்டு விமானம் எதுவும் இந்தியப் படையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில் வீழ்த்தப்பட்டு உருக்குலைந்து கிடக்கும் எப்.16 விமானத்தின் புகைப்பLத்தை வெளியிட்டு இந்தியா உறுதி செய்துள்ளது.

You'r reading இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்.16 விமானத்தின் உருக்குலைந்த புகைப்படம் வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பொதுக் கூட்டம் திடீர் ரத்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்