இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயற்சி- பாக். பரபரப்பு குற்றச்சாட்டு

Indian submarine to enter Pakistani waters?

பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயன்றதை முறியடித்துவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊருவ முயன்றது.

அமைதியை நாங்கள் விரும்புவதால் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் ஊடுருவல் முயற்சியை முறியடித்துவிட்டோம் என தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலின் போது விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நல்லெண்ண நடவடிக்கையாக அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இருநாடுகளிடையே தொடர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊருவ முயற்சித்ததாக பாகிஸ்தான் கூறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

You'r reading இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயற்சி- பாக். பரபரப்பு குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீலகிரி டூ காஞ்சிபுரம்! தொகுதி மாறுகிறாரா ஆ.ராசா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்