பாக். ஜலசந்தியில் இந்திய மணல்திட்டுகளை இலங்கை உதவியுடன் படம் பிடித்த சீனா

A new controversy erupts over Chinas Northern Lanka Visit

பாக். ஜலசந்தியில் இந்திய மணல் திட்டுப் பகுதிகளை இலங்கை உதவியுடன் சீனா படம் பிடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தற்போது இலங்கை வழியாக இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளது சீனா.

அண்மையில் இலங்கைக்கான சீனா தூதர் செங் ஷியுவான், 6 சீன அதிகாரிகள் குழு தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்குச் சென்றது. பின்னர் தலைமன்னாருக்கும் அக்குழு சென்றது.

அப்பகுதியில் இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனா குழு கேட்டறிந்தது. பின்னர் இலங்கை அதிகாரிகள் உதவியுடன் இந்தியாவுக்கு சொந்தமான மணற்திட்டு பகுதிகளை சீனா படம் பிடித்துச் சென்றது.

சீனாவின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பாக். ஜலசந்தியில் இந்திய மணல்திட்டுகளை இலங்கை உதவியுடன் படம் பிடித்த சீனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொள்ளாச்சி பலாத்காரம்... மேலும் 4 வீடியோக்கள் .. இணங்க மறுத்த பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்