ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.3.2 கோடி செலவு: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ.3.2 கோடி செலவானதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். இதனால், அவர் எம்.எல்.ஏவாக பதவிவகித்து வந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ.3 கோடியே 2 லட்சம் செலவிடப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: வழக்கமாக இடைத்தேர்தல் நடத்த சுமார் 70 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக ரூ.30264386ஐ தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது.

இத்தேர்தலுக்காக, வழக்கத்தைவிட 3 மடங்கு கூடுதல் செலவாகியது. முறையாக கணக்கு காட்டப்பட்டதால் தேர்தலில்போது பிடிபட்ட ரூ.27 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.3.2 கோடி செலவு: தேர்தல் ஆணையம் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்று கூறிய கவுதம் கம்பீர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்