பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான் ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை

IAF Shows Radar Image to Prove F-16 Fighter Jet Was Downed in Dogfight With Pakistan

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் ஆதாரத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்த வில்லை என பாகிஸ்தான் சாதித்து வந்த நிலையில், பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரேடார் வீடியோ ஆதாரத்தை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ராணுவ ரகசியம் காரணமாக இதுவரை இந்த தகவலை வெளியிடவில்லை என்றும், தற்போது பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்க வேண்டியே இந்திய விமானப்படை ரேடார் வீடியோ ஆதாரத்தை வெளியிட நேர்ந்ததாகவும் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே கபூர் தெரிவித்தார்.

அந்த வீடியோவில், சிகப்பு கோடிட்டுக் காட்டப்பட்ட ஒரு F-16 ரக போர் விமானம், இந்திய விமானப்படை போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதும். அடுத்த நொடி, முன்னிருந்த இடத்தில் இல்லாமல், F-16 போர் விமானம் தரையை நோக்கி சென்ற ரேடார் புள்ளிகளை சுட்டிக் காட்டி கபூர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோ மூலம், பிப்ரவரி 27,2019-ம் தேதி இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் இயக்கிய IAF MIG 21 Bison விமானம் தான் பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்ற உண்மையும் வெளிச்சமாகியுள்ளது என்றார்.

You'r reading பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான் ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அவ்வ்வ்... மலர் டீச்சர் இப்படி மாறிட்டாங்களே… திக் திக் அதிரன் ட்ரெய்லர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்