நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. அரசு வேலைக்கான தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் ராகுல் காந்தி வாக்குறுதி!

Will Do Away With Exam Fee For Government Posts, Says Rahul Gandhi

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான அரசு வேலைக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கான கல்வி தரம் உயர்த்தப்படும் என்றும், கல்வி கட்டண சுமைகள் படிப்படியாக ரத்தாகும் என்றும், உடனடியாக அரசு வேலைக்காண தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என பதிவிட்டிருந்தார்.

மேலும், பொதுமக்களின் சுகாதாரத்துக்கான முன்னேற்பாடுகளையும் புதிய திட்டங்களையும் காங்கிரஸ் அரசு உருவாக்கும் என்றார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக துவங்க உள்ள மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் முதல் கட்டமாக துவங்க உள்ளது. தேர்தல் யுத்தம் நெருங்கி வருவதாலும், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அடுத்த பிரதமர் யார்? -மோடிக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, சரிவில் ராகுல் காந்தி

You'r reading நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. அரசு வேலைக்கான தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் ராகுல் காந்தி வாக்குறுதி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமகமக்கும்.. வாலை கருவாடு கிரேவி ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்