வைரல் வீடியோ.. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு குதிரையில் சென்று தேர்வு எழுதிய கேரள மாணவி!

Kerala Girl CA Krishna Rides Horse En-route to Write Class 10th Board Exam

கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுதான் பலருக்கும், வாழ்க்கையை பற்றிய முதல் புரிதலையும் ஒருவித அச்சத்தையும் உண்டு செய்யும். ஆனால், தேர்வுக்கு செல்கிறோம் என்ற கவலை சிறிதும் இன்றி, எந்தவித பயமும் இன்றி துணிச்சலுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் இறுதித் தேர்வுக்கு குதிரையை ஒட்டிச் சென்றுள்ளார் இந்த மாணவி.

கேரளாவின் திரிசூரில் உள்ள மாலா எனும் பகுதியைச் சேர்ந்த சி.ஏ. கிருஷ்ணா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, தான் 7வது முதல் முறையாக குதிரையேற்றம் பயின்றுள்ளதாகவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதித் தேர்வான வரலாற்று தேர்வுக்கு குதிரையில் செல்ல வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதாகவும் கூறினார்.

திரிசூரில் உள்ள விஷ்ணு கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் அஜய் கலிண்டி மற்றும் இந்து தம்பதியினருக்கு மகளாக பிறந்த கிருஷ்ணாவிடம் சொந்தமாக இரு குதிரைகள் உள்ளன.

கிருஷ்ணாவின் இந்த வீடியோவை இணையத்தில் கண்ட மகேந்திர குழும சேர்மன் ஆனந்த் மகேந்திரா, படிப்புக்காக அந்த சிறுமி செய்த வீர செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

முதல் இடத்தில் இந்தியா..கேரளாவும் ஒரு காரணம் –உலக வங்கி

You'r reading வைரல் வீடியோ.. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு குதிரையில் சென்று தேர்வு எழுதிய கேரள மாணவி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான்- எடப்பாடி பழனிசாமி தாக்கு....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்