கோரக்பூர் குழந்தைகள் மரணம் டாக்டர். கஃபீல் கான் சஸ்பெண்ட்!

கோரக்பூர் குழந்தைகள் மரணம் டாக்டர். கஃபீல் கான் சஸ்பெண்ட்!

கோரக்பூர் குழந்தைகள் மரணம் தொடர்பாக டாக்டர் கஃபீல் கான் உள்ளிட்ட இரு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பியில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்தனர். இது தொடர்பாக எப்.ஐ.ஆரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரது பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், குழந்தைகள் வார்டுக்கு பொறுப்பாக இருந்த டாக்டர். கஃபீல்கான், அனஸ்தீசியா பிரிவின் தலைவர் டாக்டர். சதீஷ்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அனஸ்தீஸியா பிரிவிடம்தான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து வைக்கும் பொறுப்பு உள்ளது. இதன் தலைவராக இருந்த டாக்டர். சதீஷ்குமார், குழந்தைகள் இறந்து கொண்டிருந்த போது முறையான அனுமதி பெறாமல் விடுப்பில் சென்றதும் தெரிய வந்துள்ளது. டாக்டர். கஃபீல் கான் முறையாக, பணியில் செயல்படவில்லை... கவனக்குறைவாக இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் இறந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

You'r reading கோரக்பூர் குழந்தைகள் மரணம் டாக்டர். கஃபீல் கான் சஸ்பெண்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவில் பேச்சாளராக இருந்த நடிகர் செந்திலுக்கு புரமோஷன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்