திரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் துரத்தப்பட்ட வங்கதேச நடிகர்!

Bangladeshi actor Ferdous Ahmed campaigning for Trinamool told to leave India

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே காரணியைக் கொண்டுதான் பிரச்சாரக் களம் அமைந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி ஆட்சி செய்கிறது. இங்கு அந்த கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக வங்கதேசம் நாட்டில் இருந்து நடிகர் பெர்டாஸ் அகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.

அவர் ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் கன்னையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக ஜீப்பில் ஊர்வலமாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வங்கதேச நடிகர் என்பதால், அவருக்கு கூட்டம் சேர்ந்தது. இதைக் கவனித்த பா.ஜ.க.வினர், ‘வெளிநாட்டுக்காரர் எப்படி பிரச்சாரம் செய்யலாம்?’ என்று கேள்வி எழுப்பி, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

தேர்தல் நடைமுறைகள் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951ல் வெளிநாட்டுக்காரர் பிரச்சாரம் செய்வது பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. அதேசமயம், இந்திய விசா சட்டத்தில், வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவுக்கு வரும் போது எந்தவிதமான அரசியல் நிகழ்விலும் அனுமதியின்றி பங்கேற்கக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, அந்த நடிகர் பெர்டாஸ் அகமதுவின் விசாவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நேற்று உத்தரவிட்டது. அகமது, பிசினஸ் விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவர் விசா விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு, அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இனி வருங்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வர இயலாது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வங்கதேசத்தின் இன்னொரு நடிகர் காஜி அப்துன் நூர் என்பவரும் திரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக மேற்கு வங்கத்திற்கு வந்திருக்கிறார். அவர் கர்மாஹாட்டி பகுதியில் திரிணாமுல் வேட்பாளர் மதன்மித்ராவுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்ததாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அவரும் இன்று நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

 

ஹிட்லர் உயிரோடு இருந்திருந்தால் மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் – மம்தா கடும் தாக்கு

You'r reading திரிணாமுல் கட்சிக்கு பிரச்சாரம் துரத்தப்பட்ட வங்கதேச நடிகர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுடச்சுட மசாலா டீ ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்