இதுதான் சார் மனிதநேயம்hellip ரத்த தானத்துக்காக ரமலான் நோன்பை கைவிட்ட இளைஞருக்கு ஒரு ராயல் சல்யூட்!

Assam Youth break ramzan fasting for save a life

மதங்கள் அன்பை போதனை செய்யவே உருவாக்கப்பட்டன. ஆனால், சிலரது சுயநலம் அந்த பரந்த நோக்கத்தை ஒரு வட்டத்துக்குள் அடக்கி வைத்து, அதுவே நிகழ்காலத்தில் பல பிரச்னைகளுக்கான கருவியாக மாறி வருகிறது.

இந்நிலையில், மதங்களை விட மனிதநேயம் பெரியது என இஸ்லாமிய இளைஞர் ஒருவர் நிரூபித்துள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பனுல்லா அகமது, கவுகாத்தியில் ரஞ்சன் கோகாய் எனும் நோயாளிக்கு ரத்தம் கொடுப்பதற்காக தனது ரமலான் நோன்பை கைவிட்டு, ரத்தம் கொடுத்துள்ளார்.

ரமலான் நோன்பின் போது இஸ்லாமியர்கள் எச்சில் கூட விழுங்க மாட்டார்கள். உணவு உண்ணாமல் ரத்தம் கொடுத்தால், மயக்கம் வரும் என்பதால், நோன்பை கைவிட்டு விட்டு, ஒரு உயிரைக் காப்பாற்ற எந்தவொரு இரண்டாவது எண்ணமும் கொள்ளாமல் ரத்தம் கொடுத்திருக்கும் பனுல்லா அகமதுவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டீம் ஹியுமானிட்டி என்ற பேஸ்புக் பக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் இவரும் இவரது நண்பர் தபாஷ் பகதியும் அடிக்கடி ரத்த தான நிகழ்ச்சிகளை நடத்தியும், ரத்த தானம் செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading இதுதான் சார் மனிதநேயம்hellip ரத்த தானத்துக்காக ரமலான் நோன்பை கைவிட்ட இளைஞருக்கு ஒரு ராயல் சல்யூட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மம்தா முகத்தை பிரியங்கா சோப்ராவுடன் மார்பிங் - மே.வங்க பாஜக அம்மணி கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்