மும்மொழி கொள்கை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்- கஸ்தூரி ரங்கன் பேட்டி

kasthurirangan interview for daily magazine

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கஸ்தூரி ரங்கன் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

இந்த மொழியை தான் கற்க வேண்டும் என அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல என்றும்,நிறையை மொழிகளை கற்றுக்கொள்வதன் மூலம் அது மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தங்கள் குழு தயாரித்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை அமல்படுத்த, ஊடகங்கள் உதவ வேண்டும், அறிவுஜீவிகள் உதவ வேண்டும், உள்ளூர் தலைவர்கள் உதவ வேண்டும் எனவும் கஸ்தூரி ரங்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், கற்பித்தல் முறை, பாடத்திட்டத்தையும் மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

- தமிழ் 

அமெரிக்க விசா பெறுவதற்கு சமூக ஊடக தகவல் கட்டாயம்

You'r reading மும்மொழி கொள்கை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்- கஸ்தூரி ரங்கன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெகன் கட்சிக்கு தாவ நினைத்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்