மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர, ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணபிக்கலாம்

MBBS, BDS, online application on national level

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இருக்கக்கூடிய 503 MBBS இடங்களுக்கும், 15 BDS இடங்களுக்கும் ஆன்லைன் மூலம் இன்று முதல் ஜூன் 24 வரை விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 25-ம் தேதி தங்கள் கல்லூரியை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். ஜூன் 26-ம் தேதி கல்லூரியில் உள்ள இடங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ஒதுக்கீடு செய்யும். பின்னர் ஜூன் 27-ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடும்.

இறுதிப்பட்டியல் வெளியான பின், இடம் கிடைத்த மாணவர்கள் ஜூன் 28 முதல் ஜூலை 3-ம் தேதிக்குள் கல்லூரிக்கு சென்று தங்கள் பதிவை உறுதி செய்ய வேண்டும்.
முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு ஜூலை 6 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

-தமிழ்

நீட் தேர்வில் தோல்வியால் விரக்தி... தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை

You'r reading மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர, ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணபிக்கலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்..! தஞ்சையில் நடந்த பரபரப்பு நிகழ்வ

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்