உங்கள் ஸ்மார்ட் டி.வியில் வைரஸ் இருக்கிறதா?

Do your smart TV have virus

இணையவெளியில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த சாதனம் என்றாலும் அதன் இயக்கத்தினுள் மற்றவர்கள் நுழையக்கூடிய அல்லது வைரஸ் என்னும் பாதிப்பு தரக்கூடிய நிரல்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் டி.வி. எனப்படும் திறன் தொலைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான வாடிக்கையாளர் சேவை பிரிவு, கணினிகளை குறித்த இடைவெளியில் வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதிப்பதுபோல ஸ்மார்ட் டி.விகளையும் சோதிப்பது அவசியம் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


நவீன தொலைக்காட்சிகள் ஏன் பாதிக்கப்படுகின்றன?
நவீன தொலைக்காட்சிகளில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்கிறோம். பென் டிரைவ் போன்ற சாதனங்களை தொலைக்காட்சியோடு இணைத்து பயன்படுத்துகிறோம். தரவிறக்கம் செய்யப்படும் அல்லது பென் டிரைவ் போன்ற வெளி சாதனங்களில் உள்ள கோப்புகளில் (ஃபைல்) இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நிரல்களாகிய வைரஸ்கள் எளிதாக தொலைக்காட்சியினுள் சென்று விடும்.


சாம்சங் தொலைக்காட்சியில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியும் வழிகள்
சாம்சங் ஸ்மார்ட் டிவியை ஆன் செய்து அதிலுள்ள Settings என்ற பகுதிக்குச் செல்லவும்.
அதில் General என்ற பகுதியில் உள்ள System manager பிரிவை தெரிந்தெடுக்கவும்
பிறகு Smart Security என்ற தெரிவிலுள்ள Scan என்ற கட்டளையை சொடுக்கவும்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்ட தொலைக்காட்சி
கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பல தொலைக்காட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆண்ட்ராய்டு செயலிகளை நிறுவுவதற்காகவாவது ஆண்ட்ராய்டை பயன்படுத்துகின்றன. ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகளில் வைரஸ் இருக்கிறதா என்ற கண்டுபிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமான செயலி எதுவும் இல்லை. ஆகவே, பயனர்கள் நம்பகத்தன்மை வாய்ந்த ஏதாவது செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.


தரம் வாய்ந்த ஏதாவது ஒரு ஆன்ட்டிவைரஸ் (Android application package) செயலியை நம்பகத்தன்மை வாய்ந்த மூலத்திலிருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும்
அதை பென்டிரைவ் / தம்ப் டிரைவ் / யூஎஸ்பி டிரைவ் பயன்படுத்தி தொலைக்காட்சிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை தொலைக்காட்சியில் நிறுவவும்
ஸ்மார்ட் டி.வியில் வைரஸ் கண்டுபிடிக்கக்கூடிய செயலி நிறுவப்பட்டதும் அதை இயக்கி scan பொத்தான் மூலம் டி.வி. பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதா என்று சோதிக்கலாம்.
இந்த செயலிகள் அனைத்துமே மொபைல் தளங்களில் இயங்கக்கூடியவை. ஆகவே, செயலியை பயன்படுத்த மௌஸ் மற்றும் விசைப்பலகை தேவைப்படும்.

எல்ஜி டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்: ஜூன் 26ம் தேதி அறிமுகம்

You'r reading உங்கள் ஸ்மார்ட் டி.வியில் வைரஸ் இருக்கிறதா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட மறுப்பு.... ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்க

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்