ஆந்திராவில் பூனையை தொலைத்த குஜராத் தம்பதி..! 20 நாட்களாக பூனையை தேடும் பணி

Gujarat couples lost cat in renikunda

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டனர்.

அதற்கு பாபு என பெயர் சூட்டி தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பூனையுடன் திருப்பதிக்கு வந்தனர். பின்னர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து இரண்டு நாட்கள் திருமலையில் தங்கிவிட்டு, 13ம் தேதி ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது தங்கள் மகனாக வளர்த்து வந்த பூனையை ( பாபு ) யாரோ சிலர் எடுத்துச் சென்றுள்ளனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஜியாஸ் - மீனா தம்பதியினர் பூனையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு அங்குள்ள கடை வியாபாரிகளிடமும் பொதுமக்கள் என வீதிவீதியாக சென்று தேடி வருகின்றனர். பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மீனா தம்பதியினரிடம் இருந்து மர்ம நபர்கள் ஏமாற்றி பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து தங்கள் பூனையை தேடி வருகின்றனர். போலீசார் பூனை காணாமல் போனதை எந்த விதத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்து தேடுவது என்று தெரியாமல், நீங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர். இருப்பினும் தங்கள் பூனை கிடைக்கும் வரை குஜராத் செல்லமாட்டோம் என ரயில் நிலையத்திலேயே பூனைக்காக காத்திருக்கின்றனர்.

You'r reading ஆந்திராவில் பூனையை தொலைத்த குஜராத் தம்பதி..! 20 நாட்களாக பூனையை தேடும் பணி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய பட்ஜெட் எப்படி..? எந்தப் பக்கம் கருத்து சொல்வது..?- சர்ச்சையான சு.சாமியின் 'டிவிட்'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்