காஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை..

Farooq Abdullahs sister Suraiya and daughter Safiya were released on bail

காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதான பரூக் அப்துல்லாவின் மகளும், சகோதரியும் விடுதலை செய்யப்பட்டனர்.

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் சிறை வைக்கப்பட்டனர். மேலும், அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

இ்ந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, பரூக் அப்துல்லாவின் மகள் சபியா, சகோதரி சுரையா ஆகியோர் உள்பட 13 பெண்கள், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர்.

இதன்பின், நேற்றிரவு(அக்.16) அவர்களை போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர். அவர்கள் ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீனிலும், அமைதியை சீர்குலைக்கும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என உத்தரவாதம் அளித்தும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

You'r reading காஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்