அயோத்தி வழக்கு தீர்ப்பு.. யாருடைய வெற்றியுமல்ல.. பிரதமர் மோடி கருத்து

Ayothya verdict should not be seen as a win or loss for anybody says Modi

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்களில், அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், யாருடைய தோல்வியாகவும் பார்க்கக் கூடாது.

ராம் பக்தியாக இருந்தாலும், ரஹிம் பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியின் உணர்வை நாம் பலப்படுத்துவதுதான் முக்கியம். அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும்.

130 கோடி இந்தியர்களும் இது வரை பின்பற்றி வரும் அமைதியும், கட்டுப்பாடும் தொடர்ந்து நீடிக்கும். இந்த தீர்ப்பின் தொடர்ச்சியாக நாட்டின் ஒற்றுமை பலப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நமது ஒற்றுமை உதவவேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

You'r reading அயோத்தி வழக்கு தீர்ப்பு.. யாருடைய வெற்றியுமல்ல.. பிரதமர் மோடி கருத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் வரவேற்கிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்