பாரதியாரை புகழ்ந்த மோடி.. தமிழில் ட்விட்..

PM Narendra Modi Remembers Subramania Bharathi

மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நீதி, சமத்துவத்தை நம்பியவர் சுப்பிரமணிய பாரதி என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி, தமிழில் ட்விட் போட்டுள்ளார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் இன்று(டிச.11) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

You'r reading பாரதியாரை புகழ்ந்த மோடி.. தமிழில் ட்விட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்