நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திய மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற ஸ்ரீதேவிக்கு அங்கேயே மாரடைப்பு வந்து மரணமடைந்தார்.
இந்த தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்ரீதேவியின் திடீர் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது. திரையுலகில் பண்முக திறமையை வெளிக்காட்டியனர்.

பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மறக்கமுடியாத நினைவலைகளை பதிவு செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என அவர் பதிவிட்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், “ ஸ்ரீதேவி மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். மூன்றாம் பிறை, லம்ஹே, இங்க்லிஷ் விங்விலிஷ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தது மற்ற நடிகர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

You'r reading நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் தமிழிசைக்கு அனுமதி மறுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்